மிரிஹானவில் ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ; கலவரமாக மாறியது

ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக  நேற்று மக்கள் திரண்டதால் அதனைச் சூழவுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.


ஜனாதிபதியின் வீட்டுக்குச் செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

 
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


ஆர்ப்பாட்டத்தின் போது விசேட அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் நால்வர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்வர்களில் ஊடகவியலாளர்களும் உள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *