கனடாவில் புதிதாக குடியேறியவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றால் தேசிய அளவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் குறித்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடாவில் புதிதாக குடியுரிமை பெற்ற 18ல் இருந்து 34 வயதுடையவர்கள் சுமார் 30% பேர் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாகவும், இதேபோன்று, பல்கலைக்கழகத்தில் படித்த இளம் கனேடியர்களில் 23 சதவீதம் பேர், அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேறு நாட்டிற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் குறித்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கனடா புலம்பெயர்ந்தோருக்கு நல்ல வாழ்க்கைத் தரத்தை வழங்குகிறது என்று கனேடிய மக்களும் புதிதாக கனடாவில் குடியேறியவர்களும் பொதுவாக நம்புகின்றனர். மேலும், புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சவால்களை கனேடியர்கள் புரிந்து கொள்ளவில்லை என 54 சதவீத கனேடியர்களுடன் ஒப்பிடுகையில், புதிதாக கனடாவில் குடியேறியவர்கள் 72 சதவீதம் பேர் ஒப்புக்கொள்கின்றனர்.
இதில் பிரதான சவால்களில் ஒன்றாக புலம்பெயர்ந்தோர் கனடாவில் எதிர்கொள்வது அதிக வாழ்க்கைச் செலவு என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனாலேயே, 18 முதல் 34 வயதுடைய புதிதாகக் குடியேறிய 75% பேர், கனடாவில் குடியிருக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதவிர கனடாவில் பிறந்தவர்கள் 46% மக்களும் இதே கருத்தை ஒப்புக் கொள்கின்றனர். கனடாவில் வாழ்க்கைச் செலவு 30 ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வீதத்தில் அண்மையில் உயர்ந்துள்ளது, பணவீக்க வீதங்கள் இன்னும் அதிகமாகலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
——————
Reported by : Sisil.L