உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 122 டொலரைத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நேற்று (23) அமெரிக்க டபிள்யூ.டி.ஐ. எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 115.68 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் உக்கிர யுத்தமே எரிபொருள் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஆசிய நாடுகளிலும் எரிபொருள் விலை அதிகரித்து வருகிறது.
—————-
Reported by : Sisil.L