இலங்கை தங்கச் சந்தையில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை இன்று (18) பிற்பகல் வரை 150,000 ரூபாவாக அதிகரித்திருந்தது.
கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள தங்க உற்பத்தியாளர்கள், ஆபரண தயாரிப்புக்கான தங்கத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
தங்கம் இறக்குமதியில் டொலர் இல்லாதது அந்த நிலைக்குக் காரணமாகும்.
இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 160,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2000 டொலரை நெருங்குவதாகவும் கூறப்படுகிறது.
———–
Reported by : Sisil.L