இன்று நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 120,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி அடுத்த சில நாட்களில் எரிவாயு தட்டுப்பாடு படிப்படியாக நீங்கும் எனத் தெரியவருகிறது.
கொழும்புத் துறைமுகத்தை அண்மித்த கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பலிலிருந்த 3500 தொன் எடை கொண்ட எரிவாயுவை இறக்கும் பணி நேற்று பிற்பகல் ஆரம்பமானது.
எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்துக்கு 8 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
————–
Reported by : Sisil.L