மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரண மாக அனைத்து ஆடைகளின் விலைகளும் 30-31% வரை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களுக்கான 40 அடி கொள்கலனுக்கு கப்பல் நிறுவனங்கள் இதுவரை 200,000 ரூபாவை அறவிடுகின்றன, ஆனால் தற்போது அது ஒரு மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு பொருளாக இறக்குமதி செய்யும் போது சதுர அடிக்கு அறவிடப்படும் தொகை 6,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக உள்ளூர் ஆடைத் தொழில் துறை கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பதாகவும் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
——————-
Reported by : Sisil.L