எரிபொருள் விலையேற்றத்தினால் தாங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பினால் மீனவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்படுவதனால் தமக்கு பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் உயர் வாழ்க்கைச் செலவு காரணமாக ஐஸ் கட்டி உட்பட ஏனைய சில்லறை விலைகள் உயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகரித்து வருவதால் மீனவர்கள் நல்ல விலைக்கு மீன்களை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்த நிலை விரைவில் முடிவுக்கு வராவிட்டால், போராட்டத்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
—————–
Reported by : Sisil.L