உக்ரைன் தலைநகர் கீவில் பொது முடக்கம் அறிவிப்பு

ரஷ்ய படைகள் நெருங்கி வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


உக்ரைன் மீது ரஷ்யா இன்று 20ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷ்யப் படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.


இந்தப் போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ் நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.


மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பாடசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இன்று இரவு முதல் பொது முடக்கம் அமுல்படுத்தப்படுகிறது.


கீவ் முழுவதும் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்துக்கு முழு பொது முடக்கம் அமுல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.


கீவ் நகர் நோக்கி ரஷ்யப் படைகள் நெருங்கி வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், பதுங்கு குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
——
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *