இலங்கையில் ஒரு டொலர் 275 ரூபா!

ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை நாட்டில் அனுமதி  பெற்ற வர்த்தக வங்கிகள் சிலவற்றில் இன்று (15) 275 ரூபாவாக விற்பனையாகின.


அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பு மிதக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், டொலரின் பெறுமதி தினமும் ஏற்ற இறக்கமாக உள்ளது.
அதன்படி இன்று பல வர்த்தக வங்கிகள் ஒரு டொலரின் விற்பனை விலையை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளன.


* சம்பத் வங்கி மற்றும் என்டிபி வங்கி – ரூ. 275.00
* இலங்கை வங்கி – ரூ. 270.00
* மக்கள் வங்கி – ரூ. 269.99
* கொமர்ஷல் வங்கி – ரூ. 265.00
* செலான் வங்கி – ரூ. 265.00
* DFCC – ரூ. 284.00
நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 265 ரூபாவாகும். அதன்படி நேற்றும் இன்றும் டொலரின் பெறுமதி 15 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *