நாட்டில் தற்போது மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சில தரப்பினர் ஊடகங்கள் ஊடாக பொய்யான அறிக்கைகளை அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
——————-
Reported by : Sisil.L