முதல் கிலோமீற்றருக்கு அறவிடப்படும் முச்சக்கர வண்டிக் கட்டணத்தை 80 ரூபாவாக அதிகரிக்க அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது.
இரண்டாவது கிலோமீற்றரில் இருந்து 50 ரூபா அறவிடப்படுவது நியாயமானது என சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகளைக் கருத்திற் கொண்டு இந்தக் கட்டண அதிகரிப்பானது நியாயமானதென அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சங்கம் மேலும் தெரிவிக்கிறது.
—————-
Reported by : Sisil.L