ரஷ்யத் தாக்குதலில் உக்ரைன் மக்கள் 1000 பேர் உயிரிழப்பு- ஐ.நா. சபை தகவல்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளையும், ஏவுகணைகளையும் வீசி உக்ரைன் நிலைகளை அழித்தது. முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.


அதேநேரத்தில் பிற நாடுகளின் ராணுவத் தளவாடங்களின் உதவியுடன் உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 1000 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இந்தத் தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.


இதற்கிடையே ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வருகிற 7-ஆம் திகதி நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து விவாதிக்கப்படுகிறது.


அதேநேரத்தில் தாங்கள் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்களை கொன்று விட்டதாக உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் ராணுவம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-


ரஷ்யப் படைகளின் 251 டாங்கிகள், 939 கவச வாகனங்கள், 105 பீரங்கி அமைப்புகள், 18 விமான எதிர்ப்பு போர் அமைப்புகள், 33 விமானங்கள், 37 ஹெலிகொப்டர்கள், 404 வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 9,166 ரஷ்ய படை வீரர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டுள்ளனர்.
———————–

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *