உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கி இன்று 8ஆவது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எளிதாக வீழ்ந்துவிடும் என ரஷ்யா நினைத்தது. ஆனால், கடைசி வரை போராடுவோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்த நிலையில் உக்ரைன் ராணுவம் எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறது.
மேற்கு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் உக்ரைன் எதிர்த் தாக்குதலை அதிகரித்துள்ளது. ஊருக்குள் புகுந்த ரஷ்ய துருப்புகளை உக்ரைன் இராணுவம் வீழ்த்தி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு இழப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இதனால் வீரர்கள், விமானங்கள், ஹெலிகொப்டர்கள் என ரஷ்யா இழப்புகளைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை எதிர் தாக்குதலில் 9 ஆயிரம் வீரர்களை வீழ்த்தியுள்ளோம் என உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 30 விமானங்கள், 31 ஹெலிகொப்டர்கள், 217 பீரங்கிகள், 374 ராணுவ வாகனங்களை அழித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது.
Reported by : Sisil.L