தற்போது நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் தொடங்குவது சாத்தியமில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலா னோர் விடுதிகளில் தங்கி கல்வி பயில்வதால் கொவிட் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, பல்கலைக்கழக அமைப்பு தற்போதுள்ள 50 சதவீத திறனில் தொடர்ந்து செயற்படும் என்று அவர் கூறினார்.
விடுதிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பொதுவாகப் பயன்படுத்துவதால் மாணவர் களிடையே கொவிட் பரவுவதைத் தடுக்க முடியவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
—————-
Reported by : Sisil.L