இலங்கையில் புற்று நோய் மருந்துகளுக்கு தட்டுப்பாடு?

மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்குத் தேவையான சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளர்கள் தெரிவித்தனர்.

 
எவ்வாறாயினும், நோயாளி கள் கூறுவதைப் போல் மஹரகம அபேக்ஷா வைத்திய சாலையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றதா என வைத்தியசாலையின் பணிப்பா ளர் விசேட மருத்துவ நிபுணர் விஜித் குணசேகரவிடம் வின வியபோது, நோயாளர்கள் கூறும் மருந்து வகைகள் வைத்தியசாலையில் உள்ளன என்றார். எனினும் தனிப்பட்ட நோயாளியின் பெயரில் கொண்டுவரப்படும் சில மருந்து வகைகள் கிடைப்பதில் சற்றுத் தாமதம் நிலவுகிறது என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

 
இதனிடையே, பதுளை பொது வைத்தியசாலையிலும் புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் சில மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது என்று நோயாளர்கள் தெரிவித்தனர். அதேபோல சில பகுதிகளில் புற்றுநோயாளர் களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளிலும் தற்போது மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
———-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *