ரூபாவின் இருப்பிலும் நெருக்கடி :உதய கம்மன்பில

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவுக்கு டொலர் நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலைமையில் தற்போது ரூபா இருப்புக்கும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளது என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன், எரிபொருளின் விலையை அதிகரிக்காவிடின் எரிபொருள் கொள்வனவுக்கான ரூபாவை திரட்டிக்கொள்வதில் பாதிப்பு ஏற்படும். எரிபொருள் விநியோகத்தில் பெரும் நட்டத்தை கூட்டுத்தாபனம் எதிர் கொள்கிறது. 

 

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பலமுறை கோரிக்கையை முன்வைத்துள்ளது. தற்போதைய நிலைமையில் எரிபொருளின் விலையை அதிகரிக்காவிடின் எரிபொருள் இறக் குமதிக்கான ரூபாவைக் கூட திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை தோற்றம் பெறும் என்றும் அவர் கூறினார்.
———
Reported by : Sisil.L
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *