கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழா இம்முறையும் பக்தர்கள் பங்கேற்பின்றியே நடைபெறும் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மயிலிட்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கச்சதீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழா வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இந்தத் திருவிழாவில் பங்கேற்க 500 பக்தர்களுக்கே – இலங்கையர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என்று யாழ். மாவட்ட செயலர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதனிடையே, இந்திய பக்தர்களும் திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட் டது. இந்த நிலையிலேயே திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிப்பது என்று ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆண்டு போன்று இம்முறையும் அருட்தந்தையர்கள் மட்டுமே பூசை, திருப்பலிகளை ஒப்புக் கொடுப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
———-
Reported by : Sisil.L