கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை எடுத்துக் கொண்ட ஒருவர் கூட இதுவரை இறக்கவில்லை என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி மருத்துவர் ருவன் விஜேமுனி உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் நடத்திய கணக்கெடுப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் பெப்ரவரி 10 வரை கொழும்பில் பதிவான 33 கொவிட் இறப்புகளில், 08 பேர் ஒரு டோஸ் கூட கொவிட் தடுப்பூசியைப் பெறவில்லை என்றும் 22 பேர் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெறவில்லை என்றும் மீதமுள்ள மூன்று பேர் ஒரு டோஸ் மட்டுமே பெற்றுள்ளனர் என்றும் மருத்துவர் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சர்வதேசப் பாடசாலைகளில் 90 வீதமானோர் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசியைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டினாலும், அரசாங்கப் பாடசாலைகளில் 50 வீதமானோரே ஆர்வம் காட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
——————
Reported by : Sisil.L