கிளிநொச்சியில் கொவிட் பரிசோதனை மேற்கொள்வதில் சிக்கல்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா பரிசோ தனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள் ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.

 
மாவட்டத்தில் தற்போது 800 அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்வதற்கே பரிசோதனைக் கருவிகள் இருக்கின்றன என் றும் இதனால் கடுமையான நோய் அறிகுறிகளுடன் வருகின்றவர்களைத் தவிர சாதாரண நோய் அறிகுறிகளுடன் வரு கின்றவர்களை பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இதனால் பரிசோதனை எண்ணிக்கையை  மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 
மேற்படி 800 பரிசோதனைக் கருவிகள் ஒரு சில நாட்களில் முடிவடைந்து விடும் என்றும் அதற்குப் பின்னர் கொழும்பிலிருந்து பரிசோதனைக் கருவிகள் கிடைக்கப் பெற்றாலே தொடர்ந்தும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *