சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.


எவ்வாறாயினும், இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இடம்பெறவில்லை என சிறைச்சாலைகள் பேச்சாளரான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.


சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதியால் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.


அதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளும், போகம்பரை சிறைச்சாலையில் 11 கைதிகளும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 கைதிகளும், வாரியப்பொல சிறைச்சாலையில் 10 கைதிகளும் இதில் உள்ளடங்குகின்றனர்.
————————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *