யார் என்ன சொன்னாலும் தற்போதைக்கு மின் கட்டணத்தை அதிகரிப்பதில் நம்பிக்கை இல்லை என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
“அமைச்சர் என்ற வகையில் மின்சாரத்தை அதிகரிக்க மாட்டோம் என ஜனாதிபதிக்கும், மின்சார சபைக்கும் நான் கூறுகின்றேன். இந்த ஆண்டு குறைந்தபட்சம் 1,000 மெகா வோட் புதுப்பிக்கத்தக்க சக்தியைப் பெற முடிந்தால், எமது மின் கட்டணத்தை ஓரளவு குறைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.” என அவர் மேலும் கூறினார்.
————————–
Reported by : Sisil.L