ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஊழியர்கள் 23 பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் ஜனித் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர்களில் மூன்று மருத்துவர்கள், பதினொரு தாதியர்கள் மற்றும் ஒன்பது இளநிலை ஊழியர்கள் அடங்குகின்றனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
—————
Reported by : Sisil.L