விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ தனது பதவியை தற்காலிகமாக இராஜினாமா செய்துள்ளார்.
நாச வேலைகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய ஆபத்தான நிலைமையை நீக்கும் வரை பதவி விலகுவதாக ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
14 நாட்களுக்குள் விசாரணை நடத்தி மீண்டும் பணியில் சேரும் சூழலை உருவாக்குவேன் என்றும் இல்லையேல் நிரந்தரமாக இராஜினாமா செய்வேன் என்றும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
—————
Reported by : Sisil.L