தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அறிவிக்கப்படாத அடையாள வேலைநிறுத்தத்தால் அரசாங்கத்திற்கு சுமார் 10 மில்லியன் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பயணச்சீட்டு வாங்காமல் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டார்.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் கடந்த சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை மீண்டும் தொடங்கியதையடுத்து, சில ரயில் பயணங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், ரயில் போக்குவரத்து மீண்டும் ஒருமுறை பாதிக்கப்பட்டது.
“வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது வனப் பகுதிகளில் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு கடும் அசௌகரியங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.