இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு பெரிய வெங்காயத்தின் விலை சந்தையில் குறைவடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இவற்றின் வர்த்தகப் பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டதே இதற்கான காரணமாகும்.
நிதியமைச்சு கடந்த 31 ஆம் திகதி இறக்குமதி செய்யப் பட்ட உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் சம்பந்தமாகச் சுங்க வரியை 30 ரூபாவால் குறைத்திருந்தது.
இதற்கமைவாக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நிதியமைச்சரின் அங்கீகாரத்துடன் சம்பந்தப்பட்ட வரி குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
———————
Reported by : Sisil.L