இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண சாகித்திய விருது பெறும் நூல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவையாவன:
1. சுயகவிதை: ‘பாண்டியூரன் கவிதைகள்’ அமரர் கு. கணபதிப்பிள்ளை
சுயகவிதை: விசேட பரிசு ‘புதிய எட்டுத்தொகை’ திரு. சோ. இராஜேந்திரம் (தாமரைத்தீவான்)
சுயசிறுகதை: ‘ஒரு தேநீர் ஒரு குவளை’ ஜனாப். ஏ. அஹமது பைசல்
சுயநாவல்: ‘விடியாத இரவு’ ஜனாப். கே. எம். எம். ஜூனைதா ஷெரீப்
சிறுவர் இலக்கியம்: ‘கூடி மகிழ்வோம்’ திரு. அ. தனுராஜ்
புலமைத்துவம் ஆய்வுசார் படைப்பு: ‘இலங்கையில் வேடர் வாழ்வியலும் மாற்றங்களும்’ பேராசிரியர் வ. இன்பமோகன்
நாடகமும், நாட்டுக்கூத்தும்: ‘தமிழ் கூத்தியல்” அண்ணாவியார் மூ. அருளம்பலம்
சமூக விஞ்ஞானம் சார்ந்த நூல்கள்: ‘சமகால அரசறிவியல் ஓர் அறிமுகம்’ திரு. ஏ. யோகராஜா
நாட்டார் இலக்கியம்: ‘மண்டூர்ப் பிரதேச நாட்டார் பாடல்கள் அறிமுகமும் ஆய்வும்’ பேராசிரியர். சி. சந்திரசேகரம்
வரலாறு: ‘மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக்கலையும் அதன் வரலாற்றுப் பின்னணியும்’ எந்திரி அ. குமணன்
மொழிபெயர்ப்பு: ‘மட்டக்களப்பு மாவட்டக் கையேடு’ திரு. சா. திருவேணி சங்கமம்
12. இலக்கிய சஞ்சிகை ‘தென்றல்’ திரு. கே. கிருபாகரன்
—————————–
Reported by : Sisil.L