இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு இன்று (29) 3.1 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடந்துள்ளதாக அவ்வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் டுவிட்டர் பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
கையிருப்பு இந்த ஆண்டு இறுதி வரை பராமரிக்கப்படும் என்று நம்பப்படுகிறது என்று குறித்த டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
—————–
Reported by : Sisil.L