பாப்பரசர் பிரான்சிஸ் இத்தாலி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட 4 பேருடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் பாப்பரசரிடம் தங்களது பிரச்சினைகள் பற்றி பேசி ஆலோசனைகளைக் கேட்டனர்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட இத்தாலி பெண் ஜியோவானா என்ப வர் தனது நிலை பற்றிக் கூறினார். இதற்கு பாப்பரசர் பிரான்சிஸ் பதிலளித்துப் பேசுகையில்,
பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. தங்களது கணவர்களால் கூட வீடுகளில் பெண்கள் தாக்கப்படும், துஷ்பிரயோகம் செய்யப்படும் எண்ணிக்கை மிக மிக அதிகம். இது எனது பார்வையில் கிட்டத்தட்ட சாத்தானியமானது.
ஏன் என்றால் அது தங்களை தற்காத்துக்கொள்ள முடியாதவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்துகிறது. இது மிகவும் அவமானகரமானது.
மேரி மாதா பல இன்னல்களைச் சந்தித்தார். ஆனால் அவர் தனது கண்ணியத்தை எப்போதும் இழக்கவில்லை. நான் உங்களிடம் (பெண்கள்) நிறைய கண்ணியத்தைப் பார்க்கிறேன். நீங்கள் கண்ணியத்தை இழந்தால் இங்கு இருக்க மாட்டீர்கள். எனவே பெண்கள் தைரியமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். மீண்டு வர வேண்டும்.
Reported by : Sisil.L