தபால் திணைக்கள ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் சேவைகளும் தடைப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் 653 தபால் நிலையங்கள் மற்றும் 3410 உப தபால் நிலையங்களில் பணிபுரியும் 25,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக தேங்கியுள்ள கடிதங்கள் நாளையும் நாளை மறு தினமும் விநியோகிக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
—————
Reported by : Sisil.L