உலகின் மிகப்பெரிய ஒற்றை கல்லாக உள்ள நீல மாணிக்கம் (Blue sapphire) இலங்கையின் இரத்தினபுரியில் நேற்று(12) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்டஇந்த நீல மாணிக்கக் கல்லின் எடை சுமார் 310 கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்குச் சொந்தமான ஆய்வகத்தில், குறித்த நீலக்கல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல், சுமார் 1.5 மில்லியன் கரட் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
——————-
Reported by : Sisil.L