மூதூரில் வெடிபொருள் வெடித்து சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலை – மூதூர் – இக்பால் நகரப் பகுதியில்  வெடிபொருள் ஒன்று வெடித்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான் என்று பொலிஸார் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் 3.50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக்பால் நகரைச் சேர்ந்த ஹாபீஸ் நளீப் என்ற 15 வயதான சிறுவனே  உயிரிழந்தார்.


 சிறுவனின் சடலம் தோப்பூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நீதிவான் விசாரணைகளின் பின்னர், பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *