இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 510 கிலோ எடையுள்ள நீலமாணிக்க இரத்தினக் கல்லுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி கோரப் பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்ற பொது இரத்தினக்கற்கள் ஏலத்தில் இந்த ஏலம் பெறப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
எனினும், இரத்தினக்கல்லின் உரிமையாளர்கள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இந்த விலைக்கு இணங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக இலங்கை வழங்கும் விலை 400 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
———
Reported by : Sisil.L