கனடாவில் 15 பேருக்கு ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கனடிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் மிக கொடூரமாக தாக்கி வருகின்றது. இதனால் பல லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் மற்றும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இன்னும் கொரோனாவுக்கே ஒரு முடிவு கிடைக்காத நிலையில் கொரோனாவில் உருமாறி புதிய வகை வைரஸ் (ஒமிக்ரோன்) பரவி வருகின்றது. இந்த வைரஸ் தென் ஆபிரிக்காவில் தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது.
இதையடுத்து ஜப்பான், அமெரிக்கா,அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா,இலங்கை போன்ற 38 நாடுகளில் பரவியுள்ளது. சில நாட்களாகவே கனடாவில் கொரோனா புதிய உச்சத்தை அடைந்து வருகின்றது. இந்த நிலையில் கனடா முதல் ஒமிக்ரோன் பாதிப்பை உறுதி செய்தது.
இதையடுத்து கனடா சுகாதாரத்துறை கூறியதாவது, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கனடா முழுவதும் கடுமையான நோய் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் என்றும் பொதுச் சுகாதார அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
————
Reported by : Sisil.L