இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் குமார் தோவாலை நேற்று (02) புதுடில்லியில் சந்தித்துப் பேசினார்.
இரு நாடுகளின் பரஸ்பர மூலோபாய நலன்கள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் நிதிச் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் அமைச்சர் ராஜபக்ஷவுடன் இந்தச் சந்திப்புக்குச் சென்றிருந்தனர்.
ஸ்ரீ அஜித் குமார் தோவல் இந்தியாவின் ஐந்தாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்.
———–
Reported by : Sisil.L