நுகர்வுப்பொருட்களின் விலை அதிகரிப்பையடுத்து லெபனானில் ஆர்ப்பாட்டங்கள்

நுகர்வுப்பொருட்களின் விலை அதிகரிப்பு, உள்நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபானானின் பெய்ரூட்டில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


ஆர்ப்பாட்டக்காரர்கள் பெய்ரூட்டின் பிரதான விமான நிலையத்திற்குச் செல்லும் முக்கிய பாதையை மூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


நாட்டின் பொருளாதார நிலை மோசமடைவது வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்து நாட்டின் ஆளும் வர்க்கத்தினருக்கு தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதற்காகவே பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.


தலைநகரங்களிலும் முக்கிய நகரங்களிலும் வீதிகள் மூடப்பட்டு டயர்கள் எரிக்கப்பட்டன.


லெபனானின் பொருளாதாரம் கடந்த சில மாதங்களில் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்கா டொலருக்கு எதிரான லெபனான் நாணயத்தின் பெறுமதி குறைவு காரணமாக பொதுமக்களின் கொள்வனவு சக்தி பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது.   

——–      

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *