இலங்கையில் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவும் நிலையிலேயே குறித்த தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது.
இதன் காரணமாகவே இன்று முதல் பாண் மற்றும் கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவாலும், ஏனைய துரித உணவு வகைகளின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 17 ரூபா 50 சதத்தால் பிரிமா நிறுவனம் அதிகரித்துள்ளது.
Reported by : Sisil.L