சீனாவிலிருந்து இலங்கைக்கு உரம் ஏற்றுமதி செய்ததற்காக 6.7 மில்லியன் அமெரிக்க டொலரைச் செலுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உரக் கையிருப்பின் பெறுமதியில் 75 வீதத்தைச் செலுத்தி பிரச்சினையைத் தீர்க்க தயாராக இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த உர விவகாரம் காரணமாக சீனாவுடன் இராஜதந்திரப் பிரச்சினையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அமைச்சரவையின் ஒப்புதலுக்காக முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
—————
Reported by : Sisil.L