இந்த வாரம் 800,000 க்கும் மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை வெளியிடப்போவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உற்பத்தியில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக லாஃப்ஸ் எரிவாயு மீது கூடுதல் தேவை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜனக பத்திரத்ன தெரிவித்தார்.
இதனால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், ஆறு நாட்களுக்குள் பிரச்சினை தீர்க்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
————-
Reported by : Sisil.L