மதுபானங்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.வரவு செலவுத் திட்டம் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டதை அடுத்து, மதுபான வகைகளின் வரியில் சீராக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 1) 96 ரூபாவினாலும், 750 மில்லிலீற்றர் கொண்ட உள்நாட்டு மதுபானத்தின் விலை (வகை 2) 103 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
750 மில்லிலீற்றர் கொண்ட வெளிநாட்டு மதுபானங்களின் விலை 126 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய மதுபானங்களான 750 மில்லிலீற்றர் கொண்ட வைன் ஒன்றின் விலை 14.40 ரூபாவினாலும், பியர் (330மி.லீ – 5%க்கும் குறைந்த) விலை 3 ரூபாவினாலும் பியர் (330 மி.லீ- 5 %க்கும் அதிகமான) விலை 14.96 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
———–
Reported by : Sisil.L