யாழில் அஞ்சல் ஊழியர்கள் நேற்று போராட்டம்

யாழ். தபாலக நிர்வாக சிக்கலுக்கும், ஸ்திரமற்ற நிர்வாகத்துக்கும் எதிராக அஞ்சல் ஊழியர்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

 
இந்தப் போராட்டம் நேற்று யாழ். பிரதான அஞ்சல் வளாகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.  இதில் நிம்மதியாக கடமையாற்ற விடுங்கள், மழை வெயில் என்று பாராது கடமையாற்றும் ஊழியருக்கு மதிப்பளி, யாழ். தபாலக நிர்வாக கட்டமைப்பை மாற்று, ஆரோக்கியமான நிர்வாக சூழலை எற்படுத்தி கட மையாற்ற விடு, உயர் அதிகாரியே அடிமைத்தனம் செய்யாதே, அராஜக நிர்வாகத்தை திணிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைக ளுடன் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
தமக்கான நீதியை பெற்றுத் தரக் கோரி எட்டு அம்சங்களை உள்ளடக்கிய மக ஜரும் யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபர் க.மகேசன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட தபாலக தொழிற்சங்கத் தலைவர் ஆறுமுகம் சுபாகரன் தெரிவித்தார்.  
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *