சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு, உலக நாடுகள் கொரோனா தாக்கத்திலிருந்து மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்த நிலையில், விமான சேவை நிறுவனங்கள், விமானங்கள் மற்றும் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றன.
வாடிக்கையாளர்கள் தங்கள் உற்றார் உறவினர்களைச் சந்திக்கவும், தொழில்முறை பயணங்களை மேற்கொள்ளவும் இனி ஆர்வம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக கனேடிய விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் WestJet தலைமை வணிக அதிகாரி John Weatherill தெரிவிக்கையில், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 11 வருட வரலாற்று வளர்ச்சிக்கு நிகரான வளர்ச்சியை எதிர்கொண்டு வருகிறோம். எனவே வளர்ச்சியானது மிக மிகக் குறுகிய காலத்தில் மிகவும் அபரிமிதமாக உள்ளது என்றார்.
மேலும், டிசம்பர் மாதத்துக்குள் கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த அதே இருக்கைகள் எண்ணிக்கையில் 70 சதவீதத்தைக் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என Weatherill தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2019 உடன் ஒப்பிடும்போது ஜனவரி 2021 இல் வட அமெரிக்கப் பயணிகளின் பயன்பாடு 79 சதவீதம் குறைந்துள்ளது, இதனால் இருக்கைகள் எண்ணிக்கை 60.5 சதவீதம் குறைந்தது.
ஆனால் தற்போது நிலைமைகள் சீரடைந்துள்ளன. நான்காவது காலாண்டில் திட்டமிடப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை இன்னும் 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
—————
Reported by : Sisil.L