சீனியை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகையை வங்கிகளுக்கு வழங்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான லசந்த அழகியவண்ணவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் சீனி இறக்குமதியை முறைப்படுத்தி கட்டுப்பாட்டு விலையை வழங்க முடியும் என சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவரான நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மற்றும் சீனி இறக்குமதியாளர்களிடையே கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.
சீனிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான கடைகளில் உரிய நிர்ணய விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதில்லை.
நுகர்வோர் விவகார அதிகாரசபை அண்மையில் கட்டுப்பாட்டு விலையாக ஒரு கிலோ வெள்ளை சீனிக்கு 122 ரூபாவையும் ஒரு கிலோ பளுப்பு சீனிக்கு 125 ரூபாவையும் விதித்தது. ————
Reported by : Sisil.L