யாழ். குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இழுவை மடித் தொழிலை தடை செய்ய வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட தொழில் முறமைகளுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
இந்நிலையில் சுமந்திரனின் கோரிக்கையால், உள்ளூரில் இழுவை மடித் தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறியே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளூர் மீனவர்கள் அடிமடித் தொழில் செய்வதில்லை எனவும், இந்திய மீனவர்களே அடிமடித் தொழில் செய்கின்றனர். அதனாலேயே கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன், உள்ளூர் மீனவர்களின் வலைகளையும் அறுத்து நாசம் செய்கின்றனர்.
இந்நிலையில் பொதுவாக இழுவை மடி தொழிலுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் உள்ளூர் மீனவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டத்தின் முடிவில் சுமந்திரனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
—————————
Reported by : Sisil.L