கனடாவில் இளம்பெண் ஒருவர் கூரையே இல்லாத காரை ஓட்டி வந்த நிலையில், அவரை விசாரித்த பொலிஸாருக்கு அவர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
Saskatchewanஇலுள்ள Meadow Lake பகுதியில் தாறுமாறாக கார் ஓட்டிய 27 வயது இளம்பெண் ஒருவர், திருப்பம் ஒன்றில் ட்ரக் ஒன்றின் மீது மோதியுள்ளார். அவர் மோதிய வேகத்தில் அவரது காரின் மேற்கூரை உடைந்து விழுந்துள்ளது.
காரின் முன்பக்கக் கண்ணாடி சிதைந்த நிலையிலும், அந்தப் பெண் காரை நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்.
பிறகு வீடு ஒன்றின் முன் காரை நிறுத்திய அவரை பொலிஸார் விசாரித்த போது, அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட, நான்கு மடங்கு அதிக மது அருந்தியிருந்தமை தெரியவந்தது.
அத்துடன், அவரது காரில் ஆறு மதுப்போத்தல்கள் வெறுமையாகவும் ஒரு மதுப்போத்தல் பாதி மதுவுடனும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த காரின் நிலைமையைப் பார்த்தாலே போதும், விசாரிக்காமலே என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடித்து விடலாம் என பொலிஸ்காரர் ஒருவர் கூறினார்.
அந்தப் பெண் மீது, ஆபத்தான வகையில் வாகனம் செலுத்தியது, விபத்து ஏற்பட்ட பின்னும் காரை நிறுத்தாதது மற்றும் பொலிஸாரிடமிருந்து தப்பியோடியது முதலான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
————
Reported by : Sisil.L