எலிக் காய்ச்சலால் இருவர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தணிந்துவரும் நிலையில் மறுபுறத்தில் டெங்கு நோயும், எலிக்காய்ச்சலும் அச்சறுத்தத் தொடங்கியுள்ளன.

 
கடந்த ஜூன் மாதம் முதல் கடந்த 20ஆம் திகதி வரையான 04 மாதங்களுக்குள் இலங்கையில் எலிக்காய்ச்சல் காரணமாக 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 
குறித்த 250 நோயாளர்களும் கேகாலை மாவட்டத்தின் தெஹி யோவிட்ட மற்றும் மாவனெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.          
————-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *