மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இரு இளைஞர்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இரண்டு இளைஞர்களையும் பொலிஸ் அதிகாரி தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மோட்டார் வண்டியில் பயணித்தவர்களை பொலிஸார் நிறுத்தியபோதும் அதனைப் பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதாலேயே பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
Reported by : Sisil.L