நாட்டில் சீனி கட்டுப்பாட்டு விலை நீக்கப்படும் என்றும் இந்நிலையில் சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
நாட்டுக்குச் சீனியை இறக்குமதி செய்யும் முன்னணி நிறுவனங்களுக்கும் நிதி அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தற்போதைய கட்டுப்பாட்டு விலையில் சீனியை மொத்த விலையில் கொள்வனவு செய்யவும் விற்பனை செய்யவும் முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தையில் சில கடைகளில் ஒரு கிலோ சீனி 160 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
சீனிக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நுகர் வோர் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
கடைகளில் மற்றும் சதொச விற்பனை நிலையங்களில் சீனி போதியளவு கிடைக்காததால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
Reported by : Sisil.L