ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக வவுனியாவில் நேற்று பல பாடசாலைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் பாடசாலைக்கு வந்த மாணவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்குமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்த நிலையில் நேற்று பாடசாலைகள் திறக்கப்படவிருந்த போதிலும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் அவர்களது போராட்டம் தொடர்கின்றது.
இந்நிலையில் வவுனியாவில் 85 பாடசாலைகள் நேற்று திறக்கப்படும் என வலயக் கல்வி அலுவலகங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று காலை பாடசாலைகள் பலவற்றின் முன்வாயிற் கதவு மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.இதன் காரணமாக பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
இதேவேளை சில பாடசாலைகள் நேற்று திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்ற போதிலும் குறைந்தளவான மாணவர்களே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L