இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டோரின் 34ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு!

1987ஆம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையிலிருந்த 21பேர்  சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் 34ஆம் ஆண்டு நினைவு தினம் யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றது.


இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


சுகாதார நடைமுறைகளைப் பேணி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *