கொழும்பு – யாழ். விமான சேவை மீண்டும் நவம்பரில் ஆரம்பம்

கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – யாழ்ப்பாண உள்நாட்டு விமான சேவைகளை மீண்டும் தொடங்க சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி உள்நாட்டு விமான சேவை நவம்பர் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும்.

 
சுகாதார வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற விமான சேவைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


உள்நாட்டு விமான சேவை வாரத்துக்கு இரு முறை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்துக்கு இயக்கப்பட்டது.

 
நாளாந்தம் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இத்தகைய விமான சேவைகளை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளைப் பார்க்குமாறும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
———-
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *